Header Ads

Seo Services

ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சாவுடன் கஞ்சா வியாபாரி கைது



மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் 50 கிராம் கேரளா கஞ்சா மற்றும் 20 கிராம் 75 மில்லிக் கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கஞ்சா வியாபாரி ஒருவரை நேற்று (09) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.24 Hours

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் வாழைச்சேனை சி.பி. வீதியில் உள்ள குறித்த கஞ்சா வியாபாரியின் வீட்டை சுற்றி வழைத்து தேடுதலின் போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிராம் கேரளா கஞ்சா மற்றும் 20 கிராம் 75 மில்லிக் கிராம் ஐஸ் போதைப் பெருளை மீட்டதுடன் கஞ்சா வியாபாரியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.24Hours

இதில் கைது செய்யப்பட்டவர் 41 வயதுடையவர் எனவும் நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.24 Hours

No comments:

Powered by Blogger.